"20 விசில் விட்டும் வேகலையே!" ...குக்கருடன் போலீஸ் ஸ்டேஷன் போன  ஆசாமி! 

 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி காவல் நிலையத்திற்கு இன்று ஒரு வினோதமான 'விசிட்டர்' வந்து சேர்ந்தார். கையில் ஒரு பிரஷர் குக்கருடன் உள்ளே நுழைந்த சோடாலா ஹாஜி என்ற நபர், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்த் ராவிடம் ஒரு விசித்திரமான புகாரை அளித்தார். உகாதி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து 'தலக்கறி' சமைப்பதற்காக ஆட்டிறைச்சி வாங்கியுள்ளார் ஹாஜி. வீட்டிற்குச் சென்று ஆசையாகச் சமைக்கத் தொடங்கிய அவருக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

allowfullscreen

கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் குக்கரில் விசில் விட்டும், அந்த இறைச்சி வேகாமல் கல்லுப் போலவே இருந்துள்ளது. "ஏகப்பட்ட காசு கொடுத்துக் கறி வாங்கினேன், ஆனால் எவ்வளவு சமைத்தாலும் இது வேகவே மாட்டேன் என்கிறது; கடைக்காரர் என்னைத் தரமற்ற கறியைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார்" என ஆவேசமாக முறையிட்டார் ஹாஜி. இதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்துப் போன காவலர்கள், புகாரின் வினோதத்தைக் கண்டு சிரிப்பதா அல்லது சீரியஸாக எடுப்பதா எனத் தெரியாமல் விழித்தனர்.

இருப்பினும், புகார்தாரரின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் ஆனந்த் ராவ், உடனடியாக அந்த இறைச்சி விற்பனையாளரைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்தார். விசாரணையில், "ஒருவேளை அந்த ஆடு மிகவும் வயதானதாக இருந்திருக்கலாம், அதனால் இறைச்சி வேகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது" என விற்பனையாளர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறையினரின் முன்னிலையில் அந்தப் பழைய இறைச்சிக்கு மாற்றாகப் புதிய மற்றும் தரமான இறைச்சியை வழங்க அவர் சம்மதித்தார். "மக்களின் பிரச்சினைகள் எவ்வளவு வினோதமானதாக இருந்தாலும், அதற்குத் தீர்வு காண்பது எங்கள் கடமை" என இன்ஸ்பெக்டர் கூற, ஹாஜி குக்கருடன் நிம்மதியாக வீடு திரும்பினார். தாடிபத்ரி பகுதி முழுவதும் தற்போது இந்த ‘வேகாத மட்டன்’ விவகாரம்தான் ஹாட் டாபிக்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!