undefined

2000 கிலோ இனிப்பு, பழங்கள், காய்கறிகளால் தஞ்சை 'பெரு நந்தி’க்கு சிறப்பு அலங்காரம்.. பக்தர்கள் பரவசம்!

 

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிவபெருமானின் வாகனமான நந்தி பகவானுக்கு ஆண்டுதோறும் பிரம்மாண்டமான முறையில் காய்கறி அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

தஞ்சாவூரில் 2000 கிலோ பொருட்களாக ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி போன்ற பழங்கள், கேரட், பீட்ரூட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான இனிப்பு பலகாரங்கள் என மொத்தம் 2000 கிலோ (2 டன்) பொருட்கள் இந்த அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நந்தி பகவானின் உடல் முழுவதும் சரச்சரங்களாகக் காய்கறிகள் மற்றும் பழங்கள் கோர்க்கப்பட்டு, மாலைகளாக அணிவிக்கப்பட்டுள்ளன. நந்தியின் கொம்புகள் மற்றும் தலைப்பகுதிகளில் இனிப்பு வகைகளைக் கொண்டு நுணுக்கமான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விஸ்வரூப அலங்காரத்தைக் காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!