அட... பிரதமர் மோடிக்கு 2023 சிறந்த நியூஸ் மேக்கர் விருது... !

 

2023ம் ஆண்டு நாளையுடன் நிறைவடைகிறது. நாளை மறுதினம் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் 2023 நிகழ்வுகளை குறித்த கண்ணோட்டங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடிக்கு சிறந்த நியூஸ் மேக்கர் என புகழாரம் சூட்டியுள்ளது இந்தியா டுடே நாளிதழ். இந்திய பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பான தலைப்பு செய்திகளில் அடிக்கடி இடம் பெற்று பெரும் பேசுபொருளாகி உள்ளார்.  

இந்த ஆண்டின் நியூஸ் மேக்கராக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இந்தியா டுடே   நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.இதில் இந்தியாவில் ஜி-20 மாநாடு ,  வெளிநாட்டு தலைவர்களுடன்  நட்புறவு இவைகளால் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கப்பட்டார்.   இதையடுத்து பிரதமர் மோடியை இந்தியா டுடே நியூஸ்மேக்கர் 2023  என  அறிவித்துள்ளது.


 இதற்கான விருதை   இந்தியா டுடே குழும தலைவர் அருண் பூரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.  இது குறித்த முழு தகவல்களும் 2024 ஜனவரி  8ம் தேதி வெளியாக உள்ள 'இந்தியா டுடே' இதழில் மோடியின்   கவர்ஸ்டோரியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!