48 அணிகள்… 104 ஆட்டங்கள்… 2026 உலகக் கோப்பை கால்பந்து திருவிழா... போட்டி அட்டவணை வெளியீடு!
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி தொடங்கி ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது. முதல் முறையாக 48 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஏற்கெனவே நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்று மூலம் 42 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 அணிகள் அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் தேர்வாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவு அணிகளான மெக்சிகோ–தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா–தகுதி சுற்று அணி மோதுகின்றன. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் அல்ஜீரியாவை சந்திக்கிறது. மொத்தம் 104 ஆட்டங்கள் 3 நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் ஜூன் 27-ம் தேதியுடன் நிறைவடைகின்றன. அதன் பின் நாக்-அவுட் சுற்று தொடங்கி, ஜூலை 19-ம் தேதி நியூஜெர்சியில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!