2026 புத்தாண்டு- "திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு" - முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துமடல்!
2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார். அதில், வரவிருக்கும் புத்தாண்டை "வெற்றிக்கான புத்தாண்டு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவும், வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் வகையிலும் ஆட்சி இருக்கும்" என்ற தனது முந்தைய வாக்குறுதியைத் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட முன்னோடி திட்டங்களால் மக்கள் அடைந்த பயன்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் நிதி மற்றும் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து திமுக மட்டுமே உறுதியாகப் போராடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது" என்றும், "எதிரிகளும் உதிரிகளும் வகுக்கும் வியூகங்களைத் தகர்த்தெறிவோம்" என்றும் அவர் சாடியுள்ளார்.
புத்தாண்டு பிறந்தவுடன் ஜனவரி மாதம் முழுவதும் "திராவிடப் பொங்கல்" என்ற பெயரில் சமூகநீதி கொண்டாட்டங்களை நடத்த முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்: ஜனவரி 3 முதல் 9 வரை ஒன்றியம் மற்றும் நகர அளவில் கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 3 கட்டப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக www.dravidapongal.in என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14, 15 தேதிகளில் சாதி, மத பேதமின்றி "திராவிடப் பொங்கல்" கோலமிட்டு, பெண்கள் பங்கேற்கும் போட்டிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளார். ஜனவரி 16, 17 தேதிகளில் தமிழர் பெருமை சொல்லும் கலை மற்றும் இலக்கிய விழாக்கள் ஊர்தோறும் நடத்தப்பட வேண்டும்.
"2026-ம் ஆண்டு என்பது திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு" என்று குறிப்பிட்ட முதல்வர், தேர்தல் முடியும் வரை தொண்டர்களுக்கு ஓய்வில்லை என்றும், உழைப்பு மட்டுமே இலக்கு என்றும் கட்டளையிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!