ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்… !
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் முதல்கட்ட பணிகள் இந்த ஆண்டே தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
இதற்கான முறையான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், “2027-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலங்கள் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!