21 ஊக்குவிப்பு நிறுவனங்கள் முடக்கம்! சிக்கலில் பதஞ்சலி நிறுவனம்!?

 

இந்தியாவின் முன்னணி அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, பாபா ராம்தேவின் பதஞ்சலி உள்ளது. பதஞ்சலி மற்றும் ருச்சி சோயா ஆகிய நிறுவனங்களின் ஊக்குவிப்பு நிறுவனங்களாக 21 நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த குறிப்பிட்ட 21 ஊக்குவிப்பு நிறுவனங்கள், 1957ம் ஆண்டின், நிறுவனப் பங்குகள் ஒழுங்காற்றுச் சட்டத்தின் பிரிவு 194(5)ன்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனத்துக்கு குறைந்தபட்ச பொதுப் பங்குகள் (எல்பிஎஸ்) 25 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை பதஞ்சலியின் ஊக்குவிப்பு நிறுவனங்கள் முறையாக பின்பற்றவில்லை என்று கூறி, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் நிர்வாகங்கள், குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை நிறுத்தி வைத்துள்ளன.

பங்குச் சந்தையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், மேற்கண்ட 21 நிறுவனங்களின் 29 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 299 யூனிட் பங்குகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், மேற்கண்ட நிறுவனங்களின் பங்குகள் பரிவர்த்தனை அப்படியே நிறுத்தப்பட்டாலும், அதனால் தங்கள் பதஞ்சலி குழுமத்தின் செயல்பாடு, நிதி பரிவர்த்தனை ஆகியவற்றில் எந்த ஒரு சிக்கலும், பாதிப்பும் ஏற்படாது என்று பதஞ்சலி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!