undefined

 சென்னையை நோக்கி நகரும் டிட்வா ... 22 மாவட்டங்களில்   மழைக்கு வாய்ப்பு! 

 
 

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்து தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால் மாநிலம் முழுவதும் இடையிடையாக மழை பெய்து வருகிறது. வானிலை மாற்றம் காரணமாக இன்று காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக பகுதிகளுடன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களிலும் மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. மேலும் ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை உருவாகும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

புயல் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் அடுத்த சில மணி நேரம் குறைந்த முதல் மிதமான மழை சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்யக்கூடும் எனவும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!