பாகிஸ்தான்–ஆப்கான் எல்லையில் தலீபான் மோதலில் 23 பேர் பலி!
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கைபர் பக்துங்வா மாகாணத்தில் தடை செய்யப்பட்ட டெரிக்–இ–தலீபான் பாகிஸ்தான் (TTP) இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள குர்ரம் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் பெரிய அளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன்போது துப்பாக்கிச் சண்டை வெடித்து, 12 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதே பகுதியில் மேலும் ஒரு குழு தலீபான் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மீண்டும் தீவிர combing நடத்த, ஏற்பட்ட மோதலில் மேலும் 11 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதன் மூலம் இரண்டு நாளில் மொத்தமாக 23 தலீபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே திரா பள்ளத்தாக்கில் ஒரு வீட்டின் அருகே பீரங்கி குண்டு வெடித்ததில், 4 வயது குழந்தையுடன் ஒரு ஆண் உயிரிழந்தது பகுதியை கலக்கத்தில் ஆழ்த்தியது.
மேலும், தெற்கு வசிரிஸ்தான் பிர்மல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் பதுக்கியிருந்த 16 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படைகள் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இதேபோல் லக்கி மர்வத் பகுதியில் தலீபான் இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!