விமான விபத்தில் 241 பேர் பலி... ஒருவர் படுகாயம்... வைரலாகும் ஏர் இந்தியா பதிவு!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா A1171 விமானம் மேக்ன பகுதியில் விபத்துக்குள்ளானது. 230 பயணிகள், 12 ஊழியர்களுடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின், அவர்களது குடும்பத்தினரின் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் மட்டுமே எங்கள் முயற்சிகள் முழுமையாக கவனம் செலுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை வழங்க ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வெளியே இருந்து அழைப்பவர்கள் +91 8062779200 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!