undefined

 காங்கோவில் ஐ.எஸ் ஆதரவுள்ள தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!

 

கிழக்கு காங்கோவில் உள்ள அபாகுலு கிராமத்தை ஞாயிற்றுக்கிழமை, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஏடிஎஃப் குழுவினா் கொடூர தாக்குதல் நடத்தி 25 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளில் தீ வைத்தும், ஒரே வீட்டில் இருந்த 15 ஆண்களை உயிருடன் எரித்து கொல்லவும் செய்தனர். அதேபகுதியில் மேலும் 7 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அண்டை பகுதிகளில் 3 பேர் உயிரிழந்ததால் மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டனர்.

மனித உரிமை அமைப்புகள் இதை “திட்டமிட்ட இனப்படுகொலை” எனக் கவலை வெளிப்படுத்தியுள்ளன. ஏடிஎஃப் அமைப்பு உகாண்டா ராணுவ நடவடிக்கையால் காங்கோ எல்லைக்குள் அடைக்கலமாக புகுந்து, தற்போது ஐ.எஸ் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் இவா்களின் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கிழக்கு காங்கோவில் இதே போல் ருவாண்டா ஆதரவுடன் செயல்படும் ‘எம்23’ கிளாசிக் குழுவினரும் வன்முறையில் ஈடுபட்டு வருவதால், அந்தப் பிராந்தியம் அமைதிக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!