undefined

25,487 காலி பணியிடங்கள்... எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு...10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு வாய்ப்பு!

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருந்தால் போதும். மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு இது  பொன்னான வாய்ப்பு. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் கான்ஸ்டபிள் (GD) பணிகளுக்காக 25,487 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு முடித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. இந்த மாபெரும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் அடிப்படைத் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது தான்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.01.2026 தேதியன்று 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

சம்பளம்:

இந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். அரசு வேலையுடன் கூடிய இந்தப் பெரிய சம்பளத் தொகை, பணியில் சேருவோருக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது.

தேர்வு மற்றும் விண்ணப்ப விவரங்கள்

தேர்வு முறையைப் பொறுத்தவரை, எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 100 ஆகும். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 31, 2025-க்குள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!