undefined

நந்தனம் அரசு கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது!

 

சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி கேண்டீன் (உணவகம்) மற்றும் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் வைத்துப் பெண் ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாகக் காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்:

கடந்த 12 ஆண்டுகளாகக் கல்லூரி வளாகத்தில் கேண்டீன் நடத்தி வந்தவர். அந்த கேண்டீனில் சமையலராகப் பணியாற்றி வந்தவர். முத்துச்செல்வத்தின் நண்பர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், சமூக நலத்துறையின் 'ஒருங்கிணைந்த சேவை மையத்தில்' அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண்ணைக் கல்லூரி கேண்டீன், வளாகத்தின் மறைவான பகுதிகள் மற்றும் ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று இவர்கள் மூவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள், அதுவும் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் கேண்டீன் நடத்தி வந்த நபரே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி நேரத்திலும், வளாகத்திற்குள்ளும் இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட முத்துச்செல்வத்தின் கேண்டீன் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்துத் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு அதிகம் பேசப்படும் சூழலில், அரசு கல்வி நிறுவன வளாகத்திலேயே நடந்த இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!