undefined

நிலத் தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து  தாக்குதல்… 3 பேர் கைது!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே நிலப் பிரச்சனையில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவீரமுக்கோணம் பகுதியைச் சேர்ந்த உண்ணாமலை, கணவர் இறந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பாகம் பிரிக்கப்படாத நிலத்தில் டிராக்டர் கொண்டு உழவு பணியில் ஈடுபட்ட உறவினர்களை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குமார், கல்பனா மற்றும் பிரபாகரன் ஆகியோர், உண்ணாமலையை அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து தாக்கியதோடு, அவரது கண் முன்னே நிலத்தை டிராக்டர் மூலம் உழுதுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவேரிப்பட்டிணம் போலீசார், உண்ணாமலையை தாக்கிய உறவினர்களான குமார், கல்பனா, பிரபாகரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். நிலத் தகராறில் மூதாட்டியிடம் நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயல் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!