undefined

தயிர்சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள் படுக்கையில் சடலமாக மீட்பு!  
 

 

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்  மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா அமீன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து  வருகிறார். இந்நிலையில்   இரவு லாவண்யா தயிர் சாதம் செய்துவிட்டு தனது 3 குழந்தைகளையும் சாப்பிடுவதற்காக அழைத்துள்ளார்.

அப்போது அவரும் அவருடைய குழந்தைகளும் தயிர் சாதம் சாப்பிட்ட நிலையில் அவருடைய கணவர் சென்னையா மட்டும் வேறு உணவு பரிமாறியுள்ளார். அதன் பின் அனைவரும் தூங்க சென்ற நிலையில் திடீரென அதிகாலை 3 மணிக்கு லாவண்யாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.  அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் அவரது 3 குழந்தைகளும் படுக்கையறையில் மூச்சு பேச்சின்றி  உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

இதனைக் கண்ட குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்   இரவு சாப்பிட்ட தயிர் சாதத்தில் தாய் லாவண்யா விஷம் கலந்தாரா ? என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?