ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்... எடப்பாடி தேர்தல் அறிக்கை!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இதில் முக்கியமாக வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, அந்தச் செலவினை அரசே ஏற்கும் திட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000 இலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என கூறப்பட்டது.
இதற்கிடையில் நடிகர் விஜயை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசியல் நிலைமை குறித்து விஜய்க்கு தெளிவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக புதிய வாக்குறுதிகள் கல்வி, பெண்கள் நலன், முதியோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளை கவனத்தில் கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!