undefined

கர்நாடகா கிராமத்தில் 3 நாள் துக்கம்: அலி கமேனிக்கு அஞ்சலி!

 

ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகிய தகவலுக்கு கண்டனம் தெரிவித்து, கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் அலிபுரா கிராமத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 3 நாட்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். கிராமம் முழுவதும் சோக நிலை நிலவுகிறது. சமூகத்தினர் ஒன்றுகூடி இரங்கல் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

1986ஆம் ஆண்டு அலிபுரா கிராமத்திற்கு அலி கமேனி வந்ததை அங்குள்ள மக்கள் நினைவுகூருகின்றனர். அப்போது அவர் கிராம மக்களுடன் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த வருகை இன்றளவும் அவர்களுக்கு முக்கியமான நினைவாக இருந்து வருகிறது.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அலி கமேனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. துக்க அனுசரிப்பு காரணமாக பல நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மாநில அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!