undefined

விவசாயக் கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப பலி!

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை வட்டம் ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அசோகனின் மகள்கள் யுவஸ்ரீ (13), பிரியங்கா (11) மற்றும் வெங்கடேசன் மகள் பிரியா (13). இவர்கள் பொன்னமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8 மற்றும் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர். சனிக்கிழமை மாலை துணி துவைக்க விவசாயக் கிணற்றில் இறங்கியுள்ளனர்.

அப்போது ஒருவர் தவறி விழுந்ததை பார்த்து மற்ற இருவரும் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களும் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தனர். மூவரும் தண்ணீரில் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் வாழைப்பந்தல் போலீசார் மற்றும் கலவை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மூன்று சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!