undefined

  இந்த ரயிலில் டிக்கெட் மட்டும் போதும்… 3  வேளை உணவு இலவசம்!

 

இந்திய ரயில்களில் பயணம் என்றாலே உணவு ஏற்பாடு தனி சவால். ஆனால், நாட்டில் ஒரே ஒரு ரயிலில் மட்டும் பயணித்தால் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட சைவ உணவு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அந்த சிறப்பு ரயில்தான் ‘சச்கண்ட் எக்ஸ்பிரஸ்’. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் உள்ள ஹசூர் சாஹிப் முதல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் வரை இயக்கப்படும் இந்த ரயில், 2,000 கிலோமீட்டருக்கும் மேலான தூரத்தை சுமார் 34 மணி நேரத்தில் கடக்கிறது.

சீக்கிய மதத்தில் ‘லங்கர்’ எனப்படும் சமபந்தி உணவு முறை மனிதநேயத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அதே நோக்கத்தின் தொடர்ச்சியாக, 1995-ம் ஆண்டு முதல் சச்கண்ட் எக்ஸ்பிரஸில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவை இந்திய ரயில்வேயின் ஒன்று அல்ல. சீக்கிய சமூகத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் குருத்வாரா அமைப்புகள் இணைந்து தங்களது செலவில் இந்த சேவையை இடைவிடாது நடத்தி வருகின்றனர்.

பர்ஹான்பூர், கண்ட்வா, இட்டார்சி, போபால், ஆக்ரா, டெல்லி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் ரயில் நிற்கும்போது, தன்னார்வலர்கள் பயணிகளுக்கு நேரில் உணவு வழங்குகின்றனர். காலை வேளையில் தேநீர், பால், பிரெட், பூரி-சோலே; மதியம், இரவு நேரங்களில் சாதம், பருப்பு, சப்பாத்தி, காய்கறி மற்றும் இனிப்பு வழங்கப்படுகிறது. ஏசி பயணிகளும், சாதாரண பெட்டியிலுள்ள ஏழை எளிய மக்களும் ஒரே வரிசையில் ஒரே உணவை பெறுவது தான், சச்கண்ட் எக்ஸ்பிரஸின் உண்மையான பெருமை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!