தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்... இன்று முதல் 'அம்ரித் பாரத்' சேவை தொடக்கம்.. என்னென்ன வசதிகள்?!
இன்று முதல் சாதாரண மக்களும் அதிநவீன வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'அம்ரித் பாரத்' ரயில் சேவை துவங்குகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களை மேற்கு வங்காளத்துடன் இந்த அம்ரித் ரயில்கள் இணைக்க உள்ளன.
புதிய ரயில்களின் விவரம் மற்றும் பயண வழித்தடங்கள்:
1.நாகர்கோவில் - ஜல்பாய்குரி (வண்டி எண்: 20604): இன்று மதியம் 1.45 மணிக்கு மேற்கு வங்காளத்தின் ரங்கபாணி நிலையத்திலிருந்து கிளம்புகிறது. காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக ஜனவரி 19ம் தேதி இரவு 7.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.
2. ஜல்பாய்குரி - திருச்சி (வண்டி எண்: 20610): இன்று மதியம் 1.45 மணிக்கு ஜல்பாய்குரியில் இருந்து புறப்படுகிறது. சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக ஜனவரி 19ம் தேதி மதியம் 2.15 மணிக்கு திருச்சி வந்தடையும்.
3. சந்திரகாச்சி - தாம்பரம் (வண்டி எண்: 16107): நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.45 மணிக்கு மேற்கு வங்காளத்தின் சந்திரகாச்சியில் இருந்து புறப்படுகிறது. ஜனவரி 19-ம் தேதி மாலை 6.45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
அம்ரித் பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்:
இந்த ரயில்களில் ஏசி வசதி கிடையாது. ஆனால் நவீன இருக்கைகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், பயோ-டாய்லெட்டுகள் மற்றும் சென்சார் அடிப்படையிலான குடிநீர் வசதிகள் உள்ளன. 'புஷ்-புல்' தொழில்நுட்பம் மூலம் இந்த ரயில்கள் அதிக வேகத்தில் செல்லக்கூடியவை. அதாவது ரயிலின் முன்னும் பின்னும் இரண்டு என்ஜின்கள் இணைக்கப்பட்டிருக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எளிதாகப் பயணிக்கும் வகையில், அதிவிரைவு ரயில்களுக்கு இணையான வேகத்தில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!