துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி... ஆஸ்திரேலியாவில் பதற்றம்!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ நகரில் இன்று பிற்பகல் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. பெரிய துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் சாலையில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. எதிரில் வந்தவர்களை நோக்கி அவர் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பினார்.
இந்த சம்பவத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பகுதியை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அந்த பகுதியை தவிர்க்கவும் அறிவுறுத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!