லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி பணம், செல்போன்கள் பறிப்பு!
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரே இரவில் 3 லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி பணம், செல்போன்களை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலையில் லாரி ஓட்டுநர்கள் சாலையோரம் தங்களது லாரிகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பது வழக்கம்.
இந்நிலையில், லாரி ஓட்டுநர்களை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி பணம், செல்போன் இவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை குறிவைத்து துணிகர கொள்ளை நடந்துள்ளது. பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறுவர்கள் சிலர் பணம், செல்போன்களை பறித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!