கதறித் துடித்த பெற்றோர்... வெந்நீர் கொட்டி 3 வயது குழந்தை பரிதாப பலி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வசித்து வருபவர் 29 வயது பூபாலன் . இவர் குடும்பத்துடன் ஓசூர் குமுதேப்பள்ளி அருகே பென்னாமடம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். பூபாலனுக்கு அனிதா என்ற மனைவி மற்றும் 3½ வயதில் வேதாஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.
மகளை குளிப்பாட்ட குளியல் அறைக்கு அனிதா அழைத்து சென்றார். பின்னர் வீட்டில் அடுப்பில் சுட வைத்திருந்த வெந்நீரை பாத்திரத்தில் எடுத்து வந்து குளியல் அறையில் வைத்திருந்த வாளியில் ஊற்றினார். அதன்பிறகு துண்டு எடுத்து வர வீட்டுக்குள் சென்றார். இதனிடையே குளியல் அறையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வெந்நீர் வைத்திருந்த வாளியை பிடித்து இழுத்துவிட்டாள். திடீரென அந்த வாளி கவிழ்ந்து அந்த வெந்நீர் சிறுமி வேதாஸ்ரீ மீது கொட்டியது. இதில் உடல் வெந்து வலியில் அந்த சிறுமி அலறித் துடித்தாள்.
அங்கு ஓடி வந்த தாய் உடல் வெந்து வலியால் அலறி துடித்த தனது மகளை உடனடியாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி வேதாஸ்ரீ தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!