எண்ணெய் தேய்த்து குங்குமம் வைத்து 3 வயது சிறுமி நரபலி... திருமணமாகி ஒரே மாதத்தில் சித்தி கொடூரம்!

 

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கும் சம்பவம் நடந்துள்ளது. மூன்று வயது சிறுமி அதிதி, தனது மாற்றாந்தாயின் கைகளில் கொடூரமாக உயிரிழந்தார். குடும்பத்திற்குள் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து பரபரப்பு நிலவுகிறது.

திரிவேணி மௌரியா தனது முதல் மனைவியை இழந்த நிலையில், மகளை பராமரிக்க கடந்த ஜனவரி 25ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் நள்ளிரவு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட பெண், சிறுமிக்கு எண்ணெய் தேய்த்து குங்குமம் வைத்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கோடரியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு மயங்கினார். தப்பிச் செல்ல முயன்ற பெண்ணை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது நரபலி நோக்கில் செய்யப்பட்டதா அல்லது மனநலம் பாதிப்பு காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!