கொதித்த குருமாவில் விழுந்த 3 வயது குழந்தை... 10 நாள் போராட்டத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பலி!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் கூலித்தொழிலாளி ஆனந்தனின் மகன் சுஷாந்த் (3), கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டு முன்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள ஓட்டலில் பரோட்டா குருமா அடுப்பில் கொதித்து கொண்டிருந்த நிலையில், திடீரென குழந்தை தவறி அதில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் முழுவதும் காயமடைந்து குழந்தை வேதனையில் தவித்தது.
உடனடியாக சுஷாந்த் முதலில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துநர்களின் முயற்சி தொடர்ந்தும் 10 நாட்கள் போராடிய சுஷாந்தின் உடல் இறுதியில் சிகிச்சையை ஏற்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு குழந்தை உயிரிழந்ததை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!