undefined

30 நாட்கள் இலவச விசா... கஜகஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கிய குடியரசு தின பரிசு!

 

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, கஜகஸ்தான் குடிமக்கள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் வரை 'இலவச விசா' வழங்கப்படும் என்று கஜகஸ்தானுக்கான இந்தியத் தூதர் சைலாஸ் தங்கல் அறிவித்துள்ளார். சுற்றுலாப் பயணம், மருத்துவச் சிகிச்சை மற்றும் நோயாளிகளுடன் வருபவர்கள் ஆகிய குறுகிய கால பயணங்களுக்காக இந்த இலவச விசா வழங்கப்படுகிறது.

இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகத் தூதரகத்தில் விண்ணப்பித்தோ இந்த விசாவைப் பெறலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தவும், மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தவும் இந்திய வெளியுறவுத் துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியின் போது இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 2,50,000 இந்தியர்கள் கஜகஸ்தான் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவும் கஜகஸ்தான் மக்களுக்கு விசா சலுகை வழங்கியுள்ளது.

1996 பேட்ச் ஐ.எஃப்.எஸ் (IFS) அதிகாரியான இவர், 2025 பிப்ரவரி மாதம் கஜகஸ்தானுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். மத்திய ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக கஜகஸ்தான் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கஜகஸ்தான் அரசு, இந்தியக் குடிமக்கள் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்குவதற்கான அனுமதியை (Visa-free entry) 2022-லேயே வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவும், உறவை மேம்படுத்தவும் தற்போது இந்தியாவும் 30 நாட்கள் இலவச விசா திட்டத்தை அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!