ஒரே நாளில் 300 ஆன்லைன் சூதாட்ட இணைய தள செயலிகள் முடக்கம்... !

 

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோதப் பந்தயங்கள் மூலம் இளைஞர்கள் பணத்தை இழப்பதையும், மன அழுத்தத்திற்கு உள்ளாவதையும் தடுக்க மத்திய அரசு இன்று (மார்ச் 20, 2026) ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, விதிகளை மீறிச் செயல்பட்ட மேலும் 300 சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளை  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  அதிரடியாக முடக்கியுள்ளது. இதில் வெளிநாட்டுப் பந்தயத் தளங்கள், ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் 'சட்டா-மட்கா' போன்ற பாரம்பரிய சூதாட்ட முறைகளை டிஜிட்டலில் நடத்தும் தளங்களும் அடங்கும்.

கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறைச் சட்டம்' அமலுக்கு வந்த பிறகு, இந்த நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 8,400 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், புதிய சட்டம் வந்த பிறகு மட்டும் சுமார் 4,900 தளங்கள் தூக்கப்பட்டுள்ளன. "உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளித்து மக்களைச் சூதாட்டக் குழியில் தள்ளும் எந்தவொரு தளத்திற்கும் இந்தியாவில் இடமில்லை" என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய விதிகளின்படி, தடையை மீறிச் சூதாட்டத் தளங்களை நடத்துவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இதுபோன்ற தளங்களைச் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் (Influencers) மீதும் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பணப் பரிமாற்றம் நடைபெறும் அனைத்து விதமான சூதாட்ட விளையாட்டுகளும் இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அரசின் இந்த அதிரடி வேட்டை, ஆன்லைன் மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!