தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 

தை மாதத்தின் துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சற்று  குறைந்து இல்லத்தரசிகளுக்கு ஆறுதலளித்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ஆபரண  தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. தங்கத்தின் விலை குறையும் போது, சவரனுக்கு 10 ரூபாய்க்கும் கீழ் குறைவதும், உயரும் போது ஜெட் வேகத்தில் உயர்வதும் தங்களது பெண் பிள்ளைகளின் எதிர்கால சேமிப்பு குறித்து பெரும் கவலை அளிப்பதாக இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்தனர்.

திருச்சியில், நேற்றைய ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.5,290க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல், ஒரு சவரன் தங்கம் ரூ.42,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இனி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் ஐயாயிரத்திற்கு கீழ் குறைவதற்கு வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. 

இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது. அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரு கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று காலையில் கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.71,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?