கடந்த ஆண்டு 3570 சிறப்பு ரயில்கள் !
சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உரையாற்றினார். ரயில்வே துறையின் சிறந்த செயல்பாட்டுக்கான திறன் பிரிவில் தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 2025–26 நிதியாண்டில் தெற்கு ரயில்வே மொத்த வருவாய் ரூ.9,846 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டை விட வருவாய் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு போக்குவரத்து 29.34 மில்லியன் டன்களில் இருந்து 30.54 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 57.9 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயணிகள் எண்ணிக்கை 6.2 சதவீதம் அதிகரித்த போதிலும், 92 சதவீத ரயில்கள் நேரம் தவறாமல் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் வசதிக்காக 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்களில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 568 பேர் கைது செய்யப்பட்டு ரூ.47 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாயமான 2,000 குழந்தைகள் மற்றும் கடத்தப்பட்ட 75 குழந்தைகள் மீட்கப்பட்டனர். நாட்டிலேயே முதன்முறையாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கண் விழித்திரை சேமிப்பு வங்கிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!