37 மாவோயிஸ்டுகள் சரண்... பலரின் தலைக்கு லட்சங்களில் சன்மானம் அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்டுகள் 37 பேர் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்தனர். நாட்டில் நக்சல்–மாவோயிஸ்ட் செயல்பாடுகளை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில் இந்த சரணடைப்பு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சரணடைந்தவர்களில் 3 பேரின் தலைக்கு ரூ.20 லட்சம் வரை சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்தனர். இதுதவிர, சிலரின் தலைக்கு ரூ.4 லட்சம் வரையிலும் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாநில சிறப்பு போலீஸ் படையும், மத்திய பாதுகாப்புப் படையும் இணைந்து நக்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
நாட்டின் சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சமீபகாலமாக ஒடுக்கும் நடவடிக்கைகள் வேகமடைந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டோ சரணடைந்தோ நக்சல் தலைவர்கள் பலர் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!