தெலுங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது... 39 ரயில்கள் ரத்து.. ரயில்வே அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்து அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி-ராமகுண்டம் மார்கத்தில் ராகவபூர் அருகே நேற்றிரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தரம் புரண்டது. வேகமாக சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கிடையே இருந்த லிங்க் அறுந்து போனதால் ஒன்றோடு ஒன்று மோதி பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் 3 டிராக்குகள் முழுவதும் சேதமடைந்தன. இதனால் டெல்லி, சென்னைக்கு செல்லும் ரயில்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து சம்பவத்தால் உயிர் சேதங்கள் ஏதும் இல்லாவிட்டால் பொருட் சேதம் அதிகமாக உள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். கவிழ்ந்த 11 பெட்டிகளை மீட்டெடுத்து, புதிய தண்டவாளங்களும் சம்பவ இடத்தில் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் அறுந்து விழுந்த எலக்ட்ரிக் கம்பிகள் பொருத்தும் பணியும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் செல்லும் 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. மேலும் 53 ரயில்களை மாற்று பாதையில் செல்லவும், 7 ரயில்களை நேரம் மாற்றி அனுப்பவும் தென் மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!