எரிவாயு தட்டுப்பாடு…   398  சிலிண்டர்களை  பதுக்கி வைத்த  இருவர் கைது!

 

 

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுப்படைகள் தொடங்கிய போர் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் தெரிகிறது. எரிவாயு இறக்குமதி சிக்கலால் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வணிக எரிவாயு உருளை விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் எரிவாயு உருளைகளை அதிக விலையில் விற்பனை செய்கிறார்கள். ஒரு உருளை ரூ.3,000 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் பல உணவக நிர்வாகிகள் அதையே வாங்கி தொழிலை நடத்துகின்றனர். இதனால் பல இடங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த நிலை நீடிக்காது. சில நாட்களில் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மதுரை நகரில் மானிய விலை சமையல் எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி இரு இடங்களில் இருந்து மொத்தம் 398 உருளைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மானிய எரிவாயு உருளை பதுக்கல் தொடர்பாக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கள்ளச்சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!