3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து; 2 பேர் பலி, 15 பேர் காயம்!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் சனிக்கிழமை இரவு மூன்று மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 15 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர். அவர்களில் ஆர்யன் (20), லட்சுமண் (15) ஆகிய இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஐந்து பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் அந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது கட்டிடம் இடிந்து விழ காரணமாக இருக்கலாம் என மண்டல ஆணையர் அனில் அகர்வால் தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹீராலால் நகர் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!