காணும் பொங்கலன்று போதையில் ரகளை செய்தவர் கத்தியால் குத்திக்கொலை - 4 பேர் கைது!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் கொலையில் முடிந்துள்ளன.
மேலமரவாக்காடு கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தன. அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், தனது நண்பர் சதீஷ் மற்றும் மைத்துனர் சதீஷ்குமாருடன் மதுபோதையில் அங்கு வந்துள்ளார். போட்டியில் பங்கேற்றவர்களிடம் செல்வகுமார் தேவையின்றி தகராறு செய்துள்ளார்.
ஊர்மக்கள் அவரை எச்சரித்து வெளியேற்ற முயன்றபோது, ஆத்திரமடைந்த செல்வகுமார் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களைக் குத்த முயன்றார்.
இதனால் கோபமடைந்த கிராம மக்கள் செல்வகுமாரைத் தடுத்துத் தாக்கியுள்ளனர். அப்போது அவரிடமிருந்த கத்தியைப் பிடுங்கிய கும்பல், அவரது கழுத்திலேயே குத்தியது. இதில் பலத்த காயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த மோதலில் காயமடைந்த செல்வகுமாரின் நண்பர்கள் இருவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!