ஒரே சுகப்பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள்... ஆனால் தந்தையோ சோகம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதுவும் அறுவை சிகிச்சை இன்றிச் சுகப்பிரசவம் மூலமாக இந்தக் குழந்தைகள் பிறந்ததுதான் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனிதா (30) என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், வெறும் 2 முதல் 3 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.
மருத்துவ ரீதியாக ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் (Quadruplets) பிறப்பது அரிது, அதிலும் சுகப்பிரசவம் (Normal Delivery) மூலம் நான்கு குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான மருத்துவ நிகழ்வாகக் கருதப்படுகிறது. தற்போது தாய் அனிதா மற்றும் நான்கு பெண் குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், குழந்தைகளின் எடையைக் கண்காணிக்கும் பொருட்டு அவர்கள் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழந்தைகளின் பிறப்பு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், குழந்தைகளின் தந்தை மட்டும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார். அனிதா - கணவர் தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது ஒரே பிரசவத்தில் மேலும் 4 பெண் குழந்தைகள் பிறந்திருப்பதால், அவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
தனது வருமானத்தில் 7 பெண் குழந்தைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற பொருளாதாரச் சுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அவர் சோகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!