undefined

  ஆந்திராவில் சோகம்... காருக்குள் விளையாடிய  4 குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு!

 

ஆந்திராவில் காருக்குள் விளையாடி கொண்டிருந்த போது திடீரென கதவு மூடப்பட்டதால் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து குழந்தைகள் 4 பேர் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர். 10 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்தனர். 

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை அறிந்து, அதிர்ச்சியில் உறைந்தனர். அதேபோல், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்தனர். இறந்தவர்கள் ஷாலினி, 5, அஸ்வின், 6, மற்றும் கெளதமி, 8 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது