4 மாவட்டங்களில் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 24-ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், விவசாயிகள் மற்றும் பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மாற்றம் காரணமாக அடுத்த சில நாட்கள் வெப்பநிலையில் சற்றே குறைவு காணப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!