பாதாள சாக்கடை குழியில் விழுந்த 4 வயது சிறுவன் பலி... கதறித் துடித்த பெற்றோர்!
நாமக்கல் மாநகராட்சி 4ஆவது வார்டு சின்னமுதலைபட்டியில் கடக்கால் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 4 வயது மகன் ரோகித். புத்தாண்டு தினமான நேற்று வீட்டின் முன்பு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது புதிதாக தோண்டப்பட்ட பாதாள சாக்கடை குழியில் மழைநீர் நிரம்பி இருந்தது. விளையாடிக் கொண்டே சென்ற ரோகித் அந்த 5 அடி ஆழ குழியில் தவறி விழுந்து மூழ்கினான். சிறிது நேரத்தில் குழந்தையை காணாமல் பெற்றோர் தேடியபோது, வீட்டருகே நீரில் மிதந்த நிலையில் குழந்தை கிடந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதுகாப்பின்றி குழி தோண்டியதற்கு எதிராக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!