தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை... தாய் பகீர் வாக்குமூலம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்த சத்யா (32) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் ராஜா உயிரிழந்த நிலையில், அவர் மணியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சந்தோஷி (4) என்ற மகள் பிறந்தார். குடும்பத் தகராறால் பிரிந்த சத்யா, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் வாடகை வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
அங்கு பழக்கம் ஏற்பட்ட இசக்கிராஜ் (20) என்பவருடன் சத்யாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இருவரும் செட்டியாப்பத்து பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், குழந்தை சந்தோஷி இடையூறாக இருப்பதாக கூறி அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் குழந்தையை வண்டு கடித்ததாக கூறி, உடன்குடி அரசு மருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உடலில், குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து, சத்யா மற்றும் அவரது காதலன் இசக்கிராஜை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!