2026 காலண்டர் தயாரிப்பில் ரூ.400 கோடி வணிகம்!
2026ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு மூலம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் காலண்டர்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டுக்காக சுமார் 4.25 கோடி காலண்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன. நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் என பல தரப்பினரும் காலண்டர்கள் தயாரிக்க ஆர்வம் காட்டினர். இதனால் அச்சகங்கள் முழு வேலையில் இயங்கின.
படங்கள், ஆன்மிகம், இயற்கை காட்சிகள், தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டன. இதன் மூலம் காலண்டர் தொழில் புத்தாண்டில் நல்ல லாபத்தை கண்டதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!