undefined

 47 இந்திய மீனவர்கள் விடுதலை... வங்க தேசம் மனிதநேயம்! 

 
 

இந்தியா – வங்கதேசம் இடையே சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் பரிமாற்றம் மனிதநேயத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வங்கதேச அரசு இன்று (டிச.9) 47 இந்திய மீனவர்களை விடுவித்துள்ளது. அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இதற்கு பதிலாக, இந்தியா 38 வங்கதேச மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடல் எல்லை தவறுதலால் கைது செய்யப்படும் மீனவர்களை, இரு நாடுகளும் தொடர்ந்து விடுவித்து வருகின்றன.

முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் இருநாட்டு உறவுகளில் சில இடைவெளி ஏற்பட்டதாக பேசப்பட்டாலும், மீனவர் விவகாரத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர்கிறது. கடந்த ஜனவரியில் கூட 95 இந்தியர்கள், 90 வங்கதேச மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!