undefined

சபரிமலைக்கு சென்ற  கார் விபத்தில் சிக்கி 5 ஐயப்ப பக்தர்கள் பலி!

 
 

 

ஆந்திராவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக காரில் ராமேஸ்வரம் செல்லத் திட்டமிட்ட ஐயப்ப பக்தர்களின் பயணம் சோகமாக முடிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் நடந்த கோர விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஆந்திராவில் இருந்து புறப்பட்ட இந்த ஐயப்ப பக்தர்கள், ஈ.சி.ஆர் சாலையோரம் உள்ள ஹோட்டல் முன்பாக காரை நிறுத்தி, அதிகாலை 3 மணியளவில் காருக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி வந்த மற்றொரு கார், வேகக் கட்டுப்பாடு இழந்து நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த தாக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தூக்கத்திலேயே சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை போலீசார் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த முஷ்டாக் அகமது, ராமச்சந்திர ராவ், அப்பாரோ நாயுடு, பண்டார சந்திரராவ், ராமர் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் சம்பவம், பக்தர்களிடையிலும் பொதுமக்களிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!