5 மாவட்ட மக்களுக்கு கனமழை அலெர்ட்...மறுபடியும் மொதல்...ல இருந்தா... !

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல கிராமங்கள் தென் பகுதிகளில் தண்ணீரில் தத்தளித்தன. சென்னையை பொறுத்தவரை மழைநீர் வெள்ளம் வடியவே சில நாட்களாகின. இதனையடுத்து   இன்று    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   "இன்று மாலை  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறையில் மழை பெய்யக்கூடும் “ எனத் தெரிவித்துள்ளது.

 மேலும்  "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும்   தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.    ஜனவரி 6ம் தேதி கடலோரப்பகுதிகள் ,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.  

கடலோர மாவட்டங்கள்,  உள் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக் கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!