நடிகர் மாதவன் பெருமிதம்... 5 தங்கப் பதக்கங்களை வென்று வேதாந்த் சாதனை! 

 

தமிழ் திரையுலகில் ‘ரன்’ படத்தில் அறிமுகமாகி அலைபாயுதே , ஜேஜே என ரொமாண்டிக் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர் நடிகர் மாதவன். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்த மாதவன், ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.  தற்போது தமிழில் மித்ரன் ஆர் ஜவஹர்  இயக்கும் ஒரு படத்திலும், சசிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.  இப்படத்தில் மாதவன் உடன் நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

அந்த பதிவில்  கடவுளின் கருணையாலும் மற்றும் உங்களுடைய நல்வாழ்த்துகளாலும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் வார இறுதியில் நடந்த 2023ம் ஆண்டுக்கான மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில்  வேதாந்த் கலந்துகொண்டார். இந்த போட்டிகளில்  இந்தியாவுக்காக 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் என மொத்தம்  5 தங்க பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.  மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.  ஆடவர் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களையும் மற்றும் ஆடவர் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களையும் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!