undefined

   யானை தாக்குதலில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட   5 பேர் பலி!

 
 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் யானை தாக்குதலில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்கட் மாவட்டத்திற்குட்பட்ட சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 பெண்களும் அடங்குவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே மாவட்டத்தில், வனப்பகுதியில் யானைகளை வீடியோ மற்றும் செல்பி எடுக்க முயன்ற அமித் குமார் (32) என்ற இளைஞரை யானை மிதித்துக் கொன்றது. யானைக்கு மிக அருகில் சென்று படம் எடுக்க முயன்றபோது இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ராஞ்சி மாவட்டம் ஜிண்டு கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி 36 வயது நபர் உயிரிழந்தார். இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் நேற்று ஒரே நாளில் யானை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!