ஒரே குடும்பத்தில் 5 பேர் சுட்டுக்கொலை... உ.பி.யில் பயங்கரம்!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சரஸ்வா பகுதியைச் சேர்ந்த நில அளவையாளரான அசோக் ராதி தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை அனைவரும் ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதில் அசோக் ராதி (40), அவரது மனைவி அஜந்தா (37), மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) மற்றும் தாய் வித்யவதி (70) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அனைவரின் தலையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் ராதியின் உடலருகே 3 நாட்டுத் துப்பாக்கிகள் இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!