சாக்லேட் கொடுத்து 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மாலை, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் 22 வயது இளைஞர் சிவம் பார்மர் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சென்றதும் கதவை பூட்டிய அவர், சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அச்சமடைந்த அவர் அங்கிருந்து தப்பியோடினார். பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் பிஎன்எஸ் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவம் பார்மரை கைது செய்தனர். தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!