இன்றுடன் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு… நிலுவை அரசாணைகளை உடனடி உத்தரவு!
சென்னை: திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த 7 மே 2021 ம் தேதி அன்று பொறுப்பேற்றது. இந்த அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், இன்று அந்த ஆட்சியின் காலம் நிறைவடையும் நாளாக கருதப்படுகிறது. நாளை தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அதன் பிறகு அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மற்றும் அரசு வளங்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது தடை செய்யப்படும். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் அமலும் இருக்கும்.
இதனால் முக்கிய துறைகளின் அதிகாரிகள் விடுமுறை நாளாக இருந்தாலும் பணிக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள அரசாணைகள் மற்றும் முக்கிய கோப்புகளை உடனடியாக முடித்து வெளியிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!