undefined

5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்... வேறொரு திருமணத்திற்கு துணிந்த காதலன்... இளம்பெண் செய்த பகீர் காரியம்!

 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், 5 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலன், பெற்றோர் வற்புறுத்தலால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதையடுத்து, விராலிமலைக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (28). இவர் சென்னை அரும்பாக்கத்தில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் தனது சகோதரி ஊரான வெற்றியூருக்குச் சென்றபோது, அங்கு வசித்து வந்த பெரியசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.

பின்னர் பெரியசாமி, சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றச் சென்றார். இதனால், மீனாட்சியும், பெரியசாமியும் சென்னை அம்பத்தூரில் தனியாக வாடகை வீடு எடுத்து, திருமணம் செய்யாமல் 5 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பெரியசாமியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். பெற்றோரைச் சமாதானப்படுத்தி வருவதாக மீனாட்சியிடம் கூறிவிட்டு ஊருக்குச் சென்ற பெரியசாமி, மீண்டும் சென்னைக்குத் திரும்பவில்லை.

பெற்றோர் பார்த்த பெண்ணை அவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திருமணம் செய்யவுள்ளதாக மீனாட்சிக்குத் தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனாட்சி, நேரடியாக விராலிமலைக்குச் சென்று பெண் வீட்டாரிடம் எடுத்துரைத்து, நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து சமாதானம் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகப் பெரியசாமியின் குடும்பத்தினர் மீனாட்சியிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த மீனாட்சி, அதிகளவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாகச் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மீனாட்சி தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாரிடம் பெரியசாமி, "நான் மீனாட்சியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன், ஆனால் எனது பெற்றோர் மிரட்டுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்துப் பெரியசாமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், மீனாட்சி-பெரியசாமியைச் சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!