தோண்டத் தோண்ட 50 பழங்கால சிலைகள்... கூவம் ஆற்றில் கிடைத்த விநாயகர், முருகன், ஐயப்பன் சிலைகளால் பரபரப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வழியாகச் செல்லும் கூவம் ஆற்றின் ஒரு பகுதியில், இத்தனை சிலைகள் புதைந்து கிடந்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சிலைகள் பழங்காலக் கோவிலைச் சேர்ந்தவையா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ஆற்றில் விடப்பட்டவையா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்று காலை பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் கூவம் ஆற்றுப் பகுதி வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, மணலில் ஒரு கல் சிலை பாதி புதைந்த நிலையில் இருப்பதை ஊகித்தார். இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில் ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அந்தப் பகுதியைத் தோண்டத் தொடங்கினர். ஒரு சிலையில் தொடங்கிய தேடுதல், நேரம் செல்லச் செல்ல 50 சிலைகளாக உயர்ந்தது.
கண்டெடுக்கப்பட்டவற்றில் விநாயகர், முருகர், ஐயப்பன், பல்வேறு அம்மன் சிலைகள், சர்ப்பச் சிலைகள் (நாகம்) மற்றும் நவகிரக சிலைகள் ஆகியவை அடங்கும். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சிலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அந்தச் சிலைகள் அனைத்தும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆய்வுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!